பட்டாபிராமன் பட்ட படிப்பை முடித்திருந்தான். ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை என்ற போல் அவன் பெறாத பட்டமும் இல்லை, படிக்காத படிப்பும் இல்லை. ஆனால் வேலை மட்டும் கிடைக்க அவனுக்கு கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது. ஓரளவுக்கு அவனுக்கு தகவல் நுட்பகம் தெரிந்திருந்தாலும் அதன் வளர்ச்சியின் வேகத்தை கடை பிடிக்க அவனால் இயலவில்லை. அதனாலேயே ஓரிடத்திலும் அவனால் வேலையில் நிரந்தரமாக நிற்க முடியாமல் போய் விட்டது. பல கம்பெனிகளில் வேலை செய்தும், கடைசியில் நடுத் தெருவிலேயே வந்து நின்றான். எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருந்தன. அப்படியே அவனுக்கு வயதும் 35 ஆகி விட்டது. அவனுக்கு வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போய் விட்டது. வாழ்க்கையில் நிறைய படித்து, பட்டம் பற்று, கொடி கெட்ட்டி பறக்கணும் என்று ஆசை பட்டான்.