கனவு 24 கீர்த்தி போனில் தான் ஊருக்குத்தான் வந்து கொண்டிருப்பதாகவும் டிரைனில் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்றும் சொன்னாள். ஒன்றும் அவசரமில்லை நீ நிதானமாக வா என்றாள் ஹரிதா. சௌமியாவுக்கும் ஃபோன் பண்ணி கீர்த்தி வந்து கொண்டிருக்கும் செய்தியை சொன்னாள். ஸ்டேஷன் போவோமா என கேட்டாள் ஹரிதா. சரி நான் வந்து உன்னை பிக்அப் பண்ணிக்கொள்கிறேன் என்றாள் சௌமியா. இவள் தயாராகி காத்திருந்தாள். டிரைன் இன்னும் 40 நிமிடத்தில் வந்துவிடும் என சௌமியா சொல்லியிருந்தாள் . ஹரிதாவையும் அழைத்துக்கொண்டு சௌமியா ஸ்டேஷன் போய் சேர டிரைன் வர இன்னும் 10 நிமிடங்கள் இருந்தது. சௌமியா சரியான நேரத்துக்குத்தான் வந்து விட்டோம் ஹரிதா என்றாள். கீர்த்தி சிறிய அளவிலான பெட்டி ஒன்றை மட்டுமே கொண்டு வந்திருந்தாள். ஒரு தோள் பை ஒன்றும் வைத்திருந்தாள். அவள் இவர்களை பார்த்து கைசையத்தாள். என்ன சௌமியா ஆள் இளைத்தார் போல இருக்கிறாயே சரியாக சாப்பிடுவாதில்லையா என்றாள் கீர்த்தி.