ஹரிதாவின் பகல் கனவுகள் part 21

  • 198
  • 60

கனவு 21 கீர்த்தியை சந்திக்க ஹரிதா சௌமியாவின் வீட்டுக்கே வந்துவிட்டாள். கீர்த்தி அப்போதுதான் எழுந்து காபி குடித்துக்கொண்டிருந்தாள் . சௌமியா குளித்து தயாராகி இருந்தாள். ஹரிதாவை பார்த்ததும் கீர்த்தி அவளை நலம் விசாரித்தாள். சௌமியா உக்காருடி கீர்த்தி இப்போதான் எழுந்தாள் என்று சொன்னாள். ஒண்ணும் அவசரமில்லை நிதானமாக வரட்டும் என்றாள் ஹரிதா. கோவிலுக்கு போகலாம் என சௌமியா சொன்னாள். நீ டிபன் சாப்பிட்டாயா என ஹரிதாவை கேட்டாள் சௌமியா . ஓ ஆச்சு நீ இன்னும் சாப்பிடவில்லையா என்று கேட்டாள். கோவிலுக்கு போய்விட்டு வந்து சாப்பிடலாம் என கீரத்தி சொன்னாள். இன்று என்ன விசேஷம் என்று கேட்டாள் ஹரிதா. விசேஷம் எல்லாம் ஒன்றுமில்லை. மனசே சரியில்லை என்றாள் கீர்த்தி. கீர்த்தி நான் குளித்துவிட்டு வருகிறேன் நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள் என்றாள். ஹரிதா சௌமியாவிடம் கீர்த்தி ரொம்ப வருத்தப்பட்டாளா ஆறுமுகம் பற்றி என்றாள். ஆமாம் அவளுக்கு அதுவே பெரிய கவலையாக இருக்கிறது. எல்லாம்