இரவை சுடும் வெளிச்சம் - 23

  • 246
  • 84

இரவு 23 கீதா பாஸ்போர்ட் ஆபீஸ் நெருங்கிய போது அவளுக்கு ஒரு கால் வந்தது.எடுத்து பேசினாள். என்ன அவசரம் வெளிநாடு போக .. நீ உயிரோடு இருக்க வேண்டாமா ? அப்படியே திரும்பி வீட்டுக்கு போ. அதுதான் உனக்கு நல்லது என்றது அந்த குரல். கீதா பதட்டமடைந்தாள் . வண்டியை திருப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். என்னாச்சு கீதா ஏதாவது பிரச்சனையா போன உடனே திரும்பி வந்துட்டே என்றான் முரளி. அதெல்லாம் ஒண்ணுமில்லை என்னவோ சூழ்நிலை சரியில்லை அப்படின்னு பட்டது,அதான் திரும்ப வந்துட்டேன் என்றாள் . எனக்கு நீ என்ன சொல்கிறாய் என்று புரியவில்லை . உன் விருப்பம் போல செய் என்றான். ராம் சிறையில் உள்ள செல்வத்தின் வக்கீலை சந்தித்தான். அவர் செல்வம் உங்களை சந்திக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக சொன்னார். கீதாவுக்கு இப்போது தனக்கு உதவ கூடிய நபரான பரந்தாமனும் இல்லை பிரேமாவும் இல்லை என்பதை உணரவே கஷ்டமாக