ஹரிதாவின் பகல் கனவுகள் part 18

  • 264
  • 90

கனவு 18 அன்று காலை 8 மணிக்கு ஆறுமுகத்துக்கு இளங்கோவிடம் இருந்து ஃபோன் வந்தது. சார் எப்படி இருக்கிறீர்கள் என்றான். நான் நன்றாய் இருக்கிறேன் இங்கே லட்சுமி மஹாலில் ஒரு கான்பரன்ஸ் நடக்கிறது அதற்காக வந்திருக்கிறேன் என்றார். சாயங்காலம் 6 மணி போல வந்து என்னை பார்க்க முடியுமா என்றார். நிச்சயமாக வருகிறேன். ஹரிதாவையும் முடிந்தால் அழைத்து வா என்றார் .ஹரிதாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். அவள் மகிழ்ச்சி அடைந்தாள் . நீண்ட நாட்களுக்கு பிறகு இளங்கோ சாரை பார்க்க போகிறோம் என நினைத்தாள்.ஆறுமுகத்திடம் வேறு என்ன சொன்னார் இளங்கோ என விசாரித்தாள். அவர் உன்னையும் அழைத்து வர சொன்னார் என்று சொன்னான். சௌமியா எப்பவும் போல மாறிவிட்டாள் . அவளிடத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் எதுவும் தென்படவில்லை. கீர்த்தியின் பிறந்த நாள் அடுத்த வாரம் வருகிறதென்று சௌமியா சொன்னாள். அவள் சௌமியாவோடும், ரஞ்சித் கூடவும் பிறந்த நாள் கொண்டாட விரும்புவதாக