கனவு 14 அன்று ஹரிதாவுக்கும் ,இளங்கோவிற்கும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமொன்று பள்ளியில் நடந்தது. யாரோ சுவற்றில் இளங்கோவையும், ஹரிதாவையும் இணைத்து எழுதி இருந்தார்கள். விஷயம் தெரிந்து இளங்கோ ஹரிதாவிடம் பேசினார். நீ ஒன்றும் பயப்படாதே ஹரிதா .. இவர்கள் ஏதோ என்னை பழி வாங்குவதாய் நினைத்து உன் பெயரை கெடுக்க நினைக்கிறார்கள் என்றார். நான் இந்த பிரச்சனையை பார்த்துக்கொள்கிறேன் என்றும் கூறினார். அந்த சுவர் செய்தி உடனடியாக அழிக்கப்பட்டது ஆனாலும் ஸ்கூல் மேனேஜ்மெண்ட் வரை அந்த செய்தி போய்விட்டது. பேரண்ட்ஸ் எல்லோரும் வந்து விசாரிக்க தொடங்கிவிட்டனர். உடனடியாக ஒரு என்குயரி கமிட்டி அமைக்கப்பட்டது. ஹரிதாவின் அப்பா, அம்மா கவலையடைந்தனர். ஆறுமுகம், சௌமியா இருவரும் ஹரிதாவுக்கு ஆறுதல் கூறினர். பசங்கள் இவளை பார்க்கும் பார்வை மாறி இருந்தது.அவள் கவலையெல்லாம் இளங்கோ அந்த ஸ்கூலை விட்டு வேறு ஸ்கூல் போய்விடக்கூடாது என்பதாக இருந்தது, ஹரிதா அப்பா என்னம்மா நடந்தது என விசாரித்தார். ஹரிதா