பகுதி 1: இந்தியப் பெருங்கடலில் தாய்நாட்டின் சுவடுகள்.மொரீஷியஸ் என்றதும் பலரின் நினைவுக்கு வருவது நீலக்கடலும், கண்ணைக் கவரும் கடற்கரைகளும்தான். ஆனால், என் பயணம் வெறும் சுற்றுலாவுக்கானது அல்ல. இந்தியப் பெருங்கடலின் இந்தச் சிறிய தீவிற்கும் நம் தாய்நாட்டிற்கும் இடையே இருக்கும் வரலாற்றுப் பிணைப்பையும், பண்பாட்டு வேர்களையும் தேடிய பயணம் அது.தெருவெங்கும் ஹனுமான் கொடிகளும், கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமும்தீவில் இறங்கி காரில் பயணிக்கும் போதே என்னை வியப்பில் ஆழ்த்தியது அங்கிருந்த ஆன்மீக அடையாளங்கள்தான். வீடுகளின் வாசலில் பறக்கும் வண்ணமயமான இந்து சமயக் கொடிகள், கார்களின் டேஷ்போர்டில் வீற்றிருக்கும் 'பஜ்ரங் பாலி' ஹனுமானின் படங்கள் என எங்கு நோக்கினும் நம் ஊர் பிம்பங்கள்!நான் சென்றிருந்த நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் தொடங்கவிருந்தன. இந்தியர்கள் வாழும் ஒரு தெரு முழுவதையும் விழாவுக்காக வரிசையாக அலங்கரித்து, கொடிகள் கட்டி வைத்திருந்த அழகைப் பார்த்தபோது, தாய்நாட்டை விட்டு இத்தனை மைல்கள் தள்ளி இருக்கிறோம் என்ற எண்ணமே போய்விட்டது. எளிமையான தோற்றம், மாறாத