ஹரிதாவின் பகல் கனவுகள் part 10

  • 1.9k
  • 846

கனவு 10 சமர் ஹரிதாவையே பார்த்தவண்ணம் நின்றிருந்தான். என்ன விஷயம் சமர் அப்படி பார்க்கிறாய் என்றாள். நீ என்ன நினைக்கிறாய் என்பதே எனக்கு புரியவில்லை என்றான். நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்றாள். அந்த இளங்கோ என்ன செய்து விட்டார் என்று அவர் சொல்படி நடக்கிறாய் என்றான். ஓ அவ்வளவுதானா இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா ? நீ என்னை நேசிக்கிறாயா இல்லையா . நான் பலமுறை உன்னிடம் சொல்லிவிட்டேன் ஆனால் நீ ஏன் என்னை எப்பவும் சந்தேகபடுகிறாய் .. அப்படியில்லை ஹரிதா என்னால் உன்னை பிரிந்திருக்க முடியவில்லை. நீ என்னடாவென்றால் என்னை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறாய். இதை கேட்ட ஹரிதா எதுவும் சொல்லாமல் சரி சமர் என்னால் உன்னை புரிந்து கொள்ள முடிகிறது நீதான் அவசரப்படுகிறாய். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன் என்றான் சமர். என்ன முடிவு நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்றான். இதற்குத்தான் இத்தனை பேசினாயா சமர்.