ஹரிதாவின் பகல் கனவுகள் part 9

  • 1.1k
  • 345

  கனவு 9ஹரிதா வீட்டில் எல்லோரும் தீபாவளி கொண்டாட தயாராகி கொண்டிருந்தனர். இந்த வருஷ தீபாவளியை சிறப்பாக கொண்டாட தீர்மானித்திருந்தனர். ஹரிதா சமருடன் ஷாப்பிங் போய் வந்தாள். ஆறுமுகம் தீபாவளியை கொண்டாட விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தான் .சௌமியா தீபாவளியை கொண்டாட ஹரிதாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்திருந்தாள்.நாட்கள் வேகமாக ஓடின.சமர் தீபாவளிக்கு தன்னுடைய வீட்டுக்கும் ஹரிதா வரவேண்டும் என அன்பு கட்டளை இத்திருந்தான். தீபாவளி அன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தாள் ஹரிதா. சௌமியா வந்து அவளை தன் வீட்டிற்கு அழைத்து போனாள். என்னடி சமர் என்ன சொல்லுறான். தலைதீபாவளியா ? என்றாள் சௌமியா. அதெல்லாம் ஒன்னுமில்லைடி சும்மாதான் கூப்பிட்டிருக்கிறான் என்றாள் ஹரிதா. வேற என்னடி விசேஷம் ? ஆறுமுகத்துக்கு ஃபோன் பண்ணுவோமா? நீயே பண்ணு சந்தோஷப்படுவான் என்றாள் ஹரிதா . இது இப்போ தேவையா என்றாள் சௌமியா. ம் சும்மா அவனும் நம்ம ஃப்ரெண்ட்தானேடி. சரி சரி