ஹரிதாவின் பகல் கனவுகள் part 8

  • 1.1k
  • 441

கனவு 8 ஆறுமுகம் சௌமியாவை விரும்பும் விஷயத்தை எப்படியாவது சௌமியாவிடம் தெரிவித்து விட வேண்டுமென்று ஹரிதா நினைத்தாள். அவளுக்கு அது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதனால் அவர்கள் நட்பு பாதிக்கப்பட கூடாதென்று யோசித்தாள். சுற்றுலா விடுமுறை முடிந்து எல்லோரும் ஸ்கூல் திரும்பிய பின்னும் அதன் அனுபவங்களை பேசிக்கொண்டிருந்தார்கள். வயது இந்த விஷயத்தில் எல்லோரையும் ஒரே மாதிரி சிந்திக்க தோன்றியது. ஆறுமுகம் மறுபடி ஹரிதாவிடம் சௌமியா பற்றி பேசவில்லை. சமர் தன்னுடைய அண்ணன் கல்யாணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தான். சௌமியா அதே நாளில் ரஞ்சித் வெளிநாடு செல்ல இருப்பதால் தான் வர முடியாமல் இருப்பதாக சொன்னாள். ஆறுமுகமும்,ஹரிதாவும் அவசியம் வந்துவிடுவதாக சொன்னார்கள். ரஞ்சித் வெளிநாடு போவதை சௌமியா தடுக்க விரும்பவில்லை. அவளால் என்ன செய்ய முடியும் . சிறு பெண் தானே . ஆனால் அவன் முன்னேறினால் நல்லதுதானே என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அன்று சௌமியா நல்ல மூடில் இருப்பதை உணர்ந்த