கனவு 5 ஆன்மா, மெய்ப்பொருள் ,உடல் இது குறித்து யோகா கிளாசில் விளக்கப்பட்டது. ஹரிதா இவைகளை கவனமாக கேட்டுக்கொண்டாள் . சிந்து டீச்சர் தன்னுடைய வேதனைகளை மறைக்க அந்த சிரிப்பை பயன்படுத்துவதாய் உணர்ந்தாள் . வெறும் உடலால் ஆன்மாவை உணர முடியாது அதற்க்கு பயிற்சிகள் தேவை என்று ஹரிதாவுக்கு போதிக்கப்பட்டது. ஆன்மாவை மனதின் கட்டுப்பாட்டில் வைக்க யோகா உதவும் என்று நம்பிக்கை இருந்தது. சௌமியா விசாரித்தாள் நீ ஏற்கனவே சாமியாரிணிதானே இப்போ யோகா கிளாஸ் வேற போற .. எப்படி இருக்கு யோகா கிளாஸ் என்றாள். அது நல்ல எஃபக்ட் இருக்கு. முன்ன மாதிரி இல்லை கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கு என்றாள் ஹரிதா . யாருடி சொன்னா நான் சாமியாரிணி அப்படின்னு? கூடிய சீக்கிரம் எல்லோர் மாதிரியும் நானும் செட்டில் ஆவேன் என்றாள். ம் நல்ல முன்னேற்றம் என்றாள் சௌமியா. காட்டிலே தவம் செய்வது போல வீட்டிலும் தவம் செய்தாள் ஹரிதா