கனவு 4 ஹரிதாவுக்கு தன் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. சமர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது போல தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்று நினைத்தாள். காலம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தது. ஹரிதா எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லபடியாக முடித்திருந்தாள்.இரண்டு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள் .எங்காவது பயணம் போக வேண்டுமென்று ஹரிதா அம்மா சொல்லிவந்தாள். நீங்கள் போய் வாருங்கள் நான் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கொள்கிறேன் என்றாள். அதெல்லாம் சரியா வருமா நீ சும்மா இருக்க மாட்டாய் ஊர் வம்பை இழுத்து வருவாய் என்றாள் ஹரிதா அம்மா. அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது நீ தேவையில்லாமல் பயப்படுகிறாய் என்றாள் ஹரிதா. இரண்டு நாட்களில் ஹரிதாவை கொண்டு போய் கிராமத்தில் விட்டுவிட்டு ஹரிதா அப்பா, அம்மா இருவரும் திருச்செந்தூர் சென்றனர். அவர்களது பயணம் ஒரு வாரம் நீடிக்கும் என்றே தோன்றியது ஹரிதாவுக்கு . ஹரிதா கிராமத்துக்கு