கனவு 3 டீச்சர் அப்படி அழுது ஹரிதா பார்த்ததில்லை. அழாதீங்க மேடம் என்று சொன்னாள். எல்லாம் என்னுடைய நேரம் என்று சொன்னாள் பிருந்தா. இருங்க நான் காபி போட்டு எடுத்து வரேன் என கிச்சன் உள்ளே போனாள். எல்லாவற்றையும் தேடி எடுத்து காபி போட்டு கொண்டு வந்து டீச்சரிடம் கொடுத்தாள். ரொம்ப தாங்க்ஸ் ஹரிதா என்றாள். என்ன இந்த டீச்சர் நம்மை விட வீக் ஆக இருக்கிறார்கள் என்று யோசித்தவாறே விடைபெற்றுக்கொண்டாள். ஹரிதா மனதில் டீச்சர் மேல் பரிதாபமே உண்டாயிற்று. அன்று எப்பவும் போல ஸ்கூல் போனாள். வகுப்புகள், போதனைகள் என தொடர்ந்தன. என்ன மாதிரியான பருவம் இது . எல்லோரும் இந்த பருவத்தில் சந்தோஷத்தின் உச்சியில் இருப்பதாக சொல்வார்கள். தான் மட்டும் அதில் இருந்து விலகி சதா சந்தேகத்துடனே இருக்கும்படி உள்ளதே என கருதினாள். அவள் அம்மாவிடம் இது பற்றி கேட்ட போது உனக்கு எந்தவித தொந்தரவையும் நாங்கள் கொடுக்கவில்லை.