ஹரிதாவின் பகல் கனவுகள் part 2

  • 192
  • 102

கனவு 2ஹரிதாவுடைய உலகம் முற்றிலும் வேறாக இருந்தது. சமரை பார்த்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. பிருந்தா டீச்சரிடம் அவனைப் பற்றி கேட்கலாம் என நினைத்தாள். பிறகு வேண்டாம் போனவன் போனவனாகவே இருக்கட்டும் என்று சொல்லிக்கொண்டாள். ஆனால் அவனை எதிர்த்து அவனோடு சரிக்கு சமமாக பேச முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. பிற பெண்களை போல தானும் மற்ற ஆண்களுடன் நட்பாக பழக முடியாதது குறித்து யோசித்தாள்.அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் என்று சௌமியா சொல்லியிருந்தாள். அவர்கள் நோக்கமெல்லாம் உடல் ரீதியானது என்றே ஹரிதாவுக்கு போதிக்கப்பட்டு இருந்தது.உடல் ரீதியாக தான் எந்த வகையிலும் தாழ்த்தப்படக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள். ஹரிதா ஊர் திருவிழாவிற்காக அப்பாவுடைய சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தாள் .அங்கு பாட்டியும், தாத்தாவும் இருந்தார்கள். திருவிழா களை கட்டியிருந்தது.ஹரிதா உற்சாகமாக அங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டாள். மனம் லேசாக இருந்தது. இப்படியே அப்பா, அம்மா . தாத்தா , பாட்டி என்று குடும்பம் என