பூங்கா நட்புகள்

  • 111

அந்த நகரத்தின் ஒரு பகுதியில்.... காலை சூரியன் உதயமாக காத்துக்கொண்டு இருக்கும் பறவைகள்... அந்த பகுதியை தூய்மை செய்யும் பணியாளர்கள்... வீட்டிற்கு பால் போடும் பால்காரர்... வீட்டு வேலைக்கு வரும் பெண்கள்... அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கார்களை துடைத்துக்கொண்டு இருக்கும் நபர்கள்.... அங்கும் இங்குமாக நடைபயிற்சி செய்யும் இளசுகள் மற்றும் பெரியவர்கள்... அங்கே ஒரு பூங்கா... வாசலில் விதவிதமான பாட்டிலில் கலர் கலராக உடலுக்கு ஏற்ற பானங்கள், இன்னொரு பக்கம் ஒரு 40 வயது மதிக்கதற்க ஒரு பெண்மணி வேர்க்கடலை, சோளம், கொண்டைக்கடலை, போன்றவற்றை வேகவைத்து விற்றுக்கொண்டு இருந்தாள்... அவள் அருகில் ஒரு ஆண் மற்றும் அவரின் மகள் பூ விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்....பூங்காவின் உள்ளே.... அந்த பூங்காவில் பச்சைபசலேன்று மரங்களின் இலைகள், பூச்செடியில் பூத்திருக்கும் வண்ணவண்ண பூக்கள்... நடுவில் ஒரு பெரிய நீர் தேக்கம் அதன் நடுவில் தாமரை செடிகள்... இந்த நீர் தேக்கத்தை சுற்றி நடைபாதை சிமெண்டினால் போடப்பட்டிருக்கும்... அந்த பூங்காவின்