நினைவுகளின் தொடர்கதை: ஒரு பேரன்பின் காவியம்(கடலைத் தேடும் நதி)பொறுப்புத் துறப்பு (Disclaimer)இதில் வரும் உறவுகளும் உணர்வுகளும் உண்மை; கதையின் ஓட்டத்திற்காகச் சில பெயர்களும் சம்பவங்களும் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.எந்த மனிதனும் முழுமையானவன் அல்ல. அரவிந்தும் இல்லை; மீராவும் இல்லை. அவர்களின் திருமணமும் Perfect அல்ல. ஆனால் அந்த Imperfect வாழ்க்கைக்குள் இருந்த அன்பு உண்மையானது.இந்தக் கதை ஒரு மனிதனை Perfect hero-ஆக உருவாக்குவதற்காக எழுதப்படவில்லை. ஒரு மனிதன் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக வாழ முடியும் என்பதைச் சொல்வதற்காக எழுதப்பட்டது.அரவிந்த் என் வாழ்க்கையில் இருந்த மனிதர். அவர் என்னை நேசித்தார்; அவரது சுவாசமும் நேசமும் என்னை நிரப்பியது. அந்த மூச்சுக்காற்று இன்றும் என்னைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது. என்னைப் பாதுகாத்தார்; என்னை வழிநடத்தினார். அதே நேரத்தில், ஒருநாள் நான் அவரில்லாமல் உலகத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டியிருக்கும் என்பதை அறியாமலேயே, அதற்காக என்னைத் தயார்படுத்தினார்.அதற்காக, இந்தக் கதையின் முடிவிலும் அவருக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று:நன்றி,