அழகிய திமிரே!!!ஹீரோ அறிமுகம் லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி. அந்த அறையின் மையத்தில் இருந்த கருப்பு நிற பளிங்கு மேஜையைச் சுற்றி, உலக நாடுகளின் பெரும் தொழிலதிபர்கள் அமர்ந்திருந்தனர்.அறையில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அந்தத் திறந்திருந்த கதவையே உற்று நோக்கின. அங்கே ஒருவனைக் எதிர்பார்த்து அந்த மௌனம் நீடித்தது.கீழே, கட்டிடத்தின் முகப்பில் அந்த கருப்பு நிற சொகுசு கார் வந்து நின்றது. முதலில் வெளியே வந்தது அவனது பளபளக்கும் இத்தாலியன் ஷூக்கள்.ஆறு அடி உயரம்! நேராகச் செதுக்கியது போன்ற உடல்வாகு, ஜிம்முக்குப் போய் மெருகேற்றிய அந்தத் தோள்கள், அவனது காஸ்ட்லியான இத்தாலியன் ஷர்ட்டைத் தாண்டித் தெரிந்தன.மாநிறம் கலந்த வெள்ளை நிறம், துருதுருப்பான கண்கள், எப்போதும் ஒரு குரூரமான புன்னகையோடு இருக்கும் உதடுகள். அவன் தான் நம் நாயகன் ஆதிரன்!அந்தப் பெரிய கண்ணாடிச் சுவர்களுக்குப் பின்னால், தனது