எபிசோட் 2ஹீரோயின் அறிமுகம் சென்னை... அந்த நடுத்தர வர்க்கத்து வீட்டின் அதிகாலை மௌனத்தை ஆருத்ராவின் கொலுசு சத்தம் மெல்லக் கலைத்தது.ஐஞ்சறை அடி உயரம்... செதுக்கிய ஓவியம் போன்ற அழகு... உருண்டையான முகம் , சந்தன தேகம் மானை ஒத்த விழிகள்..அடர்த்தியான இமைகள்..எடுப்பான மூக்கு அதில் குட்டி நோஸ் பின்....செந்துர இதழ்கள்..இந்திரன் படைக்கும் போதே வியந்து விட்டான் போலும் அதான் மற்றவர் கண் படாமல் இருக்க தாடையில் கொஞ்சம் பெரிதாக மச்சத்தை வைத்து விட்டான்.......அதை வைத்ததும் தான் அவள் பேரழகியாக தெரிவாள் என்று தெரியாமல்...அழகை விட அவளது விழிகளில் மின்னும் அந்தத் தீர்க்கமான அறிவுதான் அவளுக்குக் கவசம்......ஒரு பூவின் மென்மை அவளது தேகத்தில் இருக்கலாம், ஆனால் அவளது குணம் ஒரு வைரம்!....குளித்து தலைக்கு டவலை கட்டி கொண்டு அவள் கண்ணாடி முன் நின்று தன் நெற்றியில் அந்தச் சிறிய கருப்புப் பொட்டை வைத்தபோது, அவளது பிம்பம் அவளுக்கே ஒரு சவாலை விடுத்தது....மிடில் கிளாஸ் குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் அந்த