ஒரு சின்ன பொண்ணு...ஒரு இருட்டு அறையில், வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறாள். சுவர்கள் கூட மூச்சு விடுவது போல இருந்தது. காற்றே இல்லாத மாதிரி நெஞ்சு அடைத்தது.எங்க பார்தாலும் இருள். அடர்தியான, கனமான இருள். கண்களை திறந்து இருக்கிறாளா... இல்லை மூடி இருக்கிறாளா... என்று கூட தெரியாத அளவுக்கு கருமையான இருள். நேரம் கூட தெரியவில்லை. கடிகாரம் ஓடும் சத்தம் கூட இல்லை.ஆனா... அந்த சிறுமி இருட்டைப் பார்து பயந்து கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. நடுநிசி பன்னிரண்டு மணிக்கு பால் வாங்கிட்டு வரச் சொன்னாலும், தனியா தெரு தாண்டி, நாய் குரைத்தாலும் திரும்பி பார்காமல் போயிட்டு வரக்கூடிய தைரியசாலி அவள்.அப்படியிருக்க... இப்போ மட்டும் ஏன் இந்த பயம்? நெஞ்சுக்குள் ஏதோ கனக்கிறதே? யாரோ பின்னாடி நிற்பது போல ஒரு உணர்வு.சில நொடிகளுக்குப் பிறகு... அந்த இருளுக்குள் ஒரு சிறிய வெளிச்சம் தெரிந்தது. மின்மினி போல மங்கலாக. தூரத்தில் ஒரு கதவு இடுக்கு வழியாக வருவது