அவள் கேட்ட கேள்வி - 1

  • 199
  • 78

"டேய் சவுண்டையாவது குறையேண்டா. ஏன் தான் இப்படி பண்ற?" அவள் அவனுடைய அறையின் கதவைத் திறந்து கத்தினாள். "மணி நைட் 12 ஆக போகுது... நீ தூங்கலனா வேற யாரும் தூங்க கூடாதா? எனக்கு நாளைக்கு பிராக்டிகல் எக்ஸாம் இருக்குடா!" செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல அவளுடைய சத்தம் அவன் காதில் விழவில்லை.அவனுடைய அறையினுள் சென்று தொலைக்காட்சியில் சத்தத்தைக் குறைத்து வைத்தாள். அருகில் அவன் வைத்திருந்த ரிமோட்டில் அவன் பொத்தானை அழுத்தி அதை உயர்த்திக் கொண்டான். இருவரும் நான்கு ஐந்து முறைகள் இவ்வாறாக செய்த பின், அவள் கோபத்தில் தொலைக்காட்சியை அணைத்துவிட, அவனுக்கோ கோபம் மேலோங்கி வந்து விட்டது. "ஏய் உனக்கு அவ்வளவு தான் மரியாதை பாத்துக்கோ... தூங்கணும்னா போய் தூங்கு! ஏன் என்ன டிஸ்டர்ப் பண்ற?" அவன் எழுந்து அவள் அருகில் கோபத்தில் வந்தான். "நீ வைக்கிற சவுண்ட் என் ரூம் வரைக்கும் கேட்குதுடா... சாதாரண மூவியா இருந்தா பரவாயில்லை. பேய் படமா