DNA ️ கொலைகள்-4தனது லேபிள் எதையோ வேகவேகமாக கிளியரிங் செய்து கொண்டு நடுநடுவே யாருக்கோ ஈமெயில் அனுப்பிக் கொண்டிருந்த டாக்டர் ராயர் தனது கைப்பேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தவர் டிஸ்பிளேயில் ஃபாதர் மோசஸ் எனத் தெரிய பேசத் துவங்கினார்.ஹலோ ஃபாதர் எப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்தும் பேசியுமே ரொம்ப நாளாச்சு எப்ப இந்த பக்கம் வரீங்க?நான் வரது இருக்கட்டும் என்கிட்ட இருந்து உங்களுக்குப் ஃபண்டு வந்துக்கிட்டுதான இருக்கு.ஹா... ஃபண்டு வந்துகிட்டுதா இருக்குது. ஆனா ஃபாதர் ஏன் ஒருமாதிரி பேசறீங்க?அதைத்தான் திரும்ப சொல்றேன் எங்கிட்டயிருந்து உங்களுக்குப் ஃபண்டு வந்துக்கிட்டுதா இருக்குதே தவிர, உங்ககிட்ட இருந்து ரிசல்ட் வரவே மாட்டேங்குதே. எப்பதா ரிசர்ச்ச முடிச்சு ரிசல்ட்ட கொடுப்பீங்க?அதிகபட்சம் இன்னும் ஒன் இயர்க்குள்ள முடிச்சிடலாம்.என்ன விளையாடறீங்களா டாக்டர்? நாம ஏற்கனவே லண்டன்ல பழகியிருந்தாலும், நான் இந்தியாவுல செட்டில் ஆகணும்னு வந்தப்போ எனக்கு உதவி பண்ணீங்களேனு அந்த பிரெண்ட்ஷிப் அடிப்படையில உங்களுக்கு மானிட்டரி ஹெல்ப் பண்ணா, நீங்க