DNA கொலைகள் - 3

  • 66

                      DNA️கொலைகள்-3 பலவித அவஸ்தை போராட்டங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அந்த சவப்பெட்டியைக் கண்டு முதலில் அலறியவன் தோட்டக்காரன் ஜெபாஸ்டியன்.அய்யோ அம்மா... நீங்களா..ஜெபாஸ்டியன் அலறியதும் அதுவும் அம்மா நீங்களா என்று அலறியதை கேட்டதும் கூடியிருந்த கூட்டம் மேலும் பதற்றமாகி உள்ளிருந்த உடலை பார்க்க முண்டியடித்து முன்னே வந்தது. கூட்டத்தை ஒருவழியாக சாமளித்துவிட்டு ஜெபாஸ்டியனிடம் திரும்பிய இன்ஸ்பெக்டர் ரவி.,யாரு யா இது?அய்யா.. இவங்க ஃபாதரோட சிஸ்டர் ரோஸ்லின் மேரி. ஆனா இவங்க எப்படி இங்கேனு தெரியலையே..ஃபாதரோட சிஸ்டரா?.. நீ சொல்றதை பார்த்தா இவங்க இங்க இருக்குற மாதிரி தெரியலையே.ஆமாங்க அவரோட அக்கா லண்டன்ல இருக்குறாங்க.இவங்க இங்க வரத பத்தி உனக்கு எதுனா தெரியுமா? இதைப் பத்தி ஃபாதர் ஏதாவது.. எப்பவாச்சும் சொன்னாரா?இல்லைங்களே.. இவங்க வரது பத்தி எதுவும் தெரியாதுங்களே.. ஆனா...தோ பாரு ஜெபாஸ்டியன் உனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் மறைக்காம ஒன்னுவிடாம சொல்லிடு. இல்லைனா ஏதாவது சின்ன சிக்கல்னா, உன்மேல தப்பேயில்ல, நீ குற்றமே செய்யலைனாலும் அப்புறம்