DNA கொலைகள் - 1

DNA ️கொலைகள் -1தனது வேலைகள் முடிந்து விட்டதால் கான்ஸ்டபிள் முருகனை தேடிக்கொண்டு வெளியே வந்த ஏட்டு கனகாபிஷேகம் முருகன் சென்ட்ரியில் நின்று தம் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். பார்த்தவர்.,ஏய்யா எத்தனை வாட்டி சொல்றது இந்த சிகரெட் பிடிக்கிற பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு நிப்பாட்டிடுனு உடம்புக்கு நல்லதில்லையா. அதுவும் இல்லாம நம்ம ஐயாவுக்கும் இது பிடிக்காதுய்யா. ஏன் சொல்றன்னா டியூட்டி நேரம் தவிர மத்த நேரமெல்லாம் ஃப்ரெண்ட்லியாத்தான பழகுறாரு. டியூட்டி நேரத்துலக்கூட மரியாதையாத்தான பேசறாரு. நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இந்த மாதிரி ஆஃபிசர்ஸ் கிடைக்கிறது கஷ்டம்யா. அதுக்காவது அவருக்கு மரியாதை கொடுத்து நிறுத்திக்கையா.சரினே கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திடறேன்.சரி, சரி நீ நிறுத்துறது இருக்கட்டும். அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஃபோன் பண்ணாரு. ஒரு கால் மணி நேரத்துல வந்துருவாராம். இந்தா டீ வாங்கிட்டு வந்துரு என்று பிளாஸ்கை கொடுத்தவர் நீயும் டீ சாப்பிட்டு வந்துடு என்று காசு கொடுத்து அனுப்பினார்.முருகன் டீ வாங்கிக்