உருகியே உயிரானேன்....எதிர் பாராத திருமணம் இரு உள்ளங்களை இணைக்குமா ? பிரிக்குமா ?சதாரண பஸ் கண்டக்டர் வாழ்கையில் உள்ள மர்மங்கள் மற்றும் அதில் பயணம் செய்யும் நமது நாயகிக்கு நிகழும் பிரச்சனைகள் இருவரின் வாழ்கையில் அடுத்தடுத்து நடக்கும் பகுதியே நமது கதை....பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரில் அனைத்து மக்களும் அவசரமாக அலுவலகங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று கொண்டிருப்பது போலவே நமது கதையின் நாயகி யாழினியும் தனது கல்லூரி செல்வதற்காக தனது வீட்டில் தயாராகிக் கொண்டு இருக்கிறாள்.யாழினி பெயரின் இனிமைக்கு ஏற்றது போலவே அவளும் மிகவும் இனிமையானவள். தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலலகலப்பாக வைத்து இருப்பாள். கருணை குணம் மிக்கவள். எதிர்காலத்தில் அதுவே இவளுடைய வாழ்க்கையை மாற்றக்கூடியதாக அமையும்.பார்ப்பவர் கண் கவரும் அழகோவியமாக இருக்கும் 19 வயது மங்கை.அவளது கருவிழி ஒன்றே போதும் அவளை வர்ணிக்கயாழினி டைம் ஆச்சு பாரு சீக்கிரம் கீழ வா என்று கூறிக் கொண்டே தனது