தண்டட்டி - 2

  • 216
  • 93

கொல்லிமலையின் அடர்ந்த காட்டுக்குள் நுழையும் முன், பாரதி ஒரு கணம் திரும்பி வீட்டைப் பார்த்தாள். தன் நாய் குட்டியின் ஞாபகம் அவளை கூர்ந்து  கவனிக்க செய்தது. கூறை வேய்ந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், காய்ச்சலில் படுத்திருந்த லெட்சுமியும், திண்ணையில் அமர்ந்து கவலையுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியும் தெரித்தனர்.அன்றுவரை பூக்களின் வாசனையிலும், நாய்க்குட்டியின் விளையாட்டிலும் இருந்த அவளது வெகுளித்தனம், அன்றாட உணவின் நிதர்சனச் சுமையால் மெல்ல உடைந்தது.மூங்கில் கூடையைச் சுமந்து, ஈரமான மண்ணில் அவள் காலடி எடுத்து வைத்தாள். பாதை மிகவும் சவாலானது. சில இடங்களில் பாறைகள் வழுக்கின, சில இடங்களில் கால்கள் புதைகின்றன. தாயுடன் செல்லும்போது இருந்த பாதுகாப்பு உணர்வு இப்போது இல்லை. தனியாக இருக்கும் அவளை பயம் அவளைச் சூழ்ந்தது.பாரதிக்குச் சில குறிப்பிட்ட பூக்கள் பூக்கும் இடங்கள் தெரியும். ஆசைப்பட்டு அதிக தூரம் சென்று விடக் கூடாது என்ற தாயின் எச்சரிக்கை நினைவில் இருந்தது. அவள் வேகமாகப்