மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய கிராமமான கருங்குளத்திற்குள் தனது பழைய பைக்கில் நுழைந்தான் ஸ்ரீ. வானம் செந்நிறமாக மாறி, மெல்ல இருள் சூலத் தொடங்கியிருந்தது. ஊர் எல்லையிலேயே ஒரு மாபெரும் ஏரி கறுப்பு நிறத்தில் அமைதியாகக் கிடந்தது. அதன் நீர்ப்பரப்பு எந்தச் சலனமும் இன்றி ஒரு மர்மமான கண்ணாடியைப் போலத் தெரிந்தது. ஸ்ரீ ஒரு கட்டிடக் கலை நிபுணர் (Architect). மதுரையில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அவனுக்கு, இந்தக் கருங்குளம் கிராமத்தில் இருக்கும் ஒரு பாழடைந்த 'கருங்கல் பங்களாவை' ஆய்வு செய்து, அதை ஒரு நவீன ரிசார்ட்டாக மாற்றுவதற்கான ப்ராஜெக்ட் கிடைத்திருந்தது. பைக்கை நிறுத்திவிட்டு அந்தப் பங்களாவின் துருப்பிடித்த இரும்பு வாயிலைத் தள்ளினான் ஸ்ரீ. பல தசாப்தங்களாகத் திறக்கப்படாததால், அந்த வாயில் ஒரு பயங்கரமான ஓலமிடும் சத்தத்துடன் வழிவிட்டது. பங்களாவைச் சுற்றி அடர்ந்த செடி கொடிகள் மண்டிக் கிடந்தன. அந்த வீட்டின் கட்டிடக் கலை