அன்று மாலை ஒன்றன் பின் ஒன்றாக வீட்டிற்கு வந்தவர்களை குழப்பமாக பார்த்தாள் நந்தனா. ஆனால் யாரிடமும் எதுவும் கேட்காமல் தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள், யாரும் தன்னுடன் பேசப்போவதில்லை என்று தெரிந்தபின் அவளும் யாருடனும் பேச முயற்சிக்கவில்லை. அறையில் இருந்த ஜன்னல் வழியாக வெளியில் வெறித்து கொண்டிருந்தவள், தன் தந்தை தன்னை அழைக்கும் குரல் கேட்டு வெளியில் வந்ததாள். அங்கு அனைவரும் இருக்க அவளும் சதாசிவம் சொல்லப்போவதைக் கேட்கத் தயாரானாள். நந்தனா இங்க வா, என்று அழைத்து மகளை அருகில் அமர்த்திக்கொண்டவர், நீ சொன்னத நான் யோசிச்சேன் அதுல நான் ஒரு முடிவுக்கு வரணுனா நான் சொல்றத நீ செய்யனும், செய்வியா? என்ன அப்பா செய்யனும் சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன். நீ எங்ககிட்ட சொன்ன விஷயத்தை, அதாவது அர்ஜுனை திருமணம் செய்ய ஆசைப்படுற விஷயத்தை அர்ஜுன் கிட்ட சொல்லனும். நந்தனாவை விட சுற்றி இருந்த அனைவரும் அதிகமாக