கதைச் சுருக்கம்:மும்பையின் பரபரப்பான இதயமாகத் திகழும் தாராவி. அங்குள்ள நெருக்கடிகளுக்கு நடுவே, "வி குட்" என்ற பெயரில் ஒரு சிறிய, ஆனால் பிரபலமான ரெஸ்டாரண்ட்டை நடத்தி வருபவர் அர்ஜுன். அவருக்கு வயது 45 என்றாலும், பார்ப்பதற்கு 30 வயது இளைஞனைப் போலத் தோற்றமளிப்பவர். உடலால் இளமையாக இருந்தாலும், மனதால் அவர் மிகவும் மென்மையானவர். வன்முறை, சண்டை, சச்சரவு என்றாலே அவருக்குக் காத தூரம் அலர்ஜி. அமைதியை மட்டுமே விரும்பும் ஒரு சாதுவான மனிதர் அவர்.அர்ஜுனின் இந்த அமைதியான வாழ்க்கையில் ஒரே ஒரு பெரிய கனவு இருந்தது. அது அவருடைய அன்பு மகள் ரியா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான ரியா மீது அவர் உயிரையே வைத்திருந்தார். தன் மகள் இந்த உலகின் மிகச்சிறந்த சமையல் கலைஞராக உருவாக வேண்டும், அவளது கைவண்ணத்தில் உலகம் சுவைக்க வேண்டும் என்பதே அர்ஜுனின் வாழ்நாள் லட்சியம். அந்தக் கனவை நனவாக்க, தன் சக்திக்கு மீறியும் முயற்சி