நந்தவனம் - 9

  • 351
  • 138

அர்ஜுன் கூறியதைக் கேட்டு அவனையே பார்த்த நந்தனா பேச தொடங்கினாள், நீங்க ரொம்போ திறமையான நிர்வாகி, உங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். ஆனா உங்க சொந்த வாழ்க்கையில எல்லாமே தப்பாதான் முடிவெடுத்திருக்கீங்க, உங்களோடு உணர்வு போராட்டத்துக்கு ஒரு சின்னப் பொண்ண பலி குடுத்திருக்கீங்க. வெறும் அஞ்சு வருஷம் வளர்த்த உங்க பெண்ணுக்காக இவளோ பேசுறீங்களே, உங்கள முப்பது வருஷம் வளர்த்த உங்க அம்மா, தன் பையன் வாழ்க்கை இப்படி இருக்கேனு நினைச்சு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா. நீங்க மட்டும் யாழினிதான் உங்க சந்தோசம்னு அவங்களுக்கு புரியவெச்சிருந்தா உங்கள விட அவள அவங்க நல்ல பார்த்திருந்திருப்பாங்க, சரி அதைத் தான் செய்யல. டெல்லி போனதுக்கப்புறம் அவங்க வரப்போக இருக்கட்டுனு விட்டிருந்தா எல்லாரு இருந்தும் தனக்கு யாரு இல்லைங்குற எண்ணம் யாழினிக்கு வந்திருக்காது. டாக்டர் சொன்னாங்கனு இங்க கூட்டிட்டு வந்தீங்க, வந்து என்ன செஞ்சீங்க உங்க தம்பிகிட்ட யாழினிய விட்டுட்டு நீங்க