நந்தவனம் - 7

  • 48

அன்று வீட்டுக்கு வந்த நந்தனாவிடம், அவள் அம்மா நந்து யாழ் குட்டிக்கு பிடிக்குனு பால் கொழுக்கட்டை செஞ்சு வெச்சிருக்கேன். அவ வந்தா சாப்பிட குடுத்துட்டு அப்புறம் படிக்கவை நான் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன் என்று சொல்லி சென்றார். செல்லும் அம்மாவை பார்த்து புன்னகைத்து கொண்ட நந்தனா, யாழினி பற்றிய நினைவுகளில் முழ்கினாள். மிரட்சியோடு முதல் நாள் வந்த யாழினி நந்தனா தவிர யாருடனும் பேசவில்லை, யாழினி முதலில் பேச தொடங்கியது சந்தியாவிடம் தான் பெரிதாகிவிட்ட சந்தியாவின் வயிற்றைப் பார்த்து பல கேள்விகள் கேட்பாள். குட்டி பாப்பா எப்ப வரும், வந்து என்கூட விளையாடுமா, நான் அத தொட்டு பாக்கலாமா இப்படி எதாவது கேட்டு கொண்டிருப்பாள். சந்தியாவும் அவளுக்கு சலிக்காமல் பதில் சொல்லுவாள். தன் வாரிசுக்காக காத்திருக்கும் விக்ரமிற்கு யாழினி போல்தான் தன் குழந்தையும் மழலை பேசும் என்ற எண்ணமே யாழினி மேல் தனி பாசத்தை ஏற்படுத்தியது. படிக்கும் நேரம் போக