இருளில் ஒரு ஒளி

அத்தியாயம் - 01சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள்  ஹன்சிதா. இந்த திருமணத்தில் அவளுக்கு எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை அதற்காக பிடிக்காத திருமணம் எனவும் கூற முடியாது. அவளைப் பொறுத்த வரையில் இது ஒரு அரேஞ்ச் மேரேஜ் தன் தந்தை என்ன செய்தாலும் தன் நன்மைக்கே என எண்ணி இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள்அவள் மணமகள் அறையில் முழு அலங்காரத்துடன் தேவதை போல் அழகாக தயாராகி இருக்க