அதன்பின் வந்த நாட்கள் நந்தனாவிற்கு சவாலாக இருந்தது, அர்ஜுனின் அருகில் இருந்து கொண்டு முகத்தில் எதுவும் காட்டாமல் இருக்க போராட வேண்டியிருந்தது. அதையும் மீறி சிலசமயம் அவனைப் பார்த்தது பார்த்தமாதிரி நிற்பவளை கதிர் தான் மண்டையில் தட்டி நிகழ்காலத்திற்கு இழுத்துவருவான். விளம்பர படப்பிடிப்பு, எடிட்டிங், போஸ்ட் புரொடக்ஷன், என்று நாட்கள் பறந்தன. அரவிந்த் ஒரு முக்கியமான கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்தான், அதனால் அவன் நந்தனாவை பார்ப்பது அரிதாகி போனது, இந்த கேஸ் முடிந்த கையோடு நந்தனாவிடம் மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான். யாழினிக்கும், நந்தனாவிற்கும் உள்ள நெருக்கம் அரவிந்திற்கு திருப்தியாக இருந்தது. நந்தனாவிடம் தன் மனதை சொல்லப்போகும் நாளுக்காக காத்திருந்தான். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும். பார்ப்போம் யாரு நினைப்பது நடக்குதென்று. நந்தனா தன்னோட விளம்பர தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது, விக்டரி குரூப் ஆப் கம்பனிஸ் நந்தனா கம்பனியுடன் விளம்பர ஒப்பந்தம் போட அழைத்தனர். விக்டரி