நந்தவனம் - 4

அலுவலகத்தில் விளம்பரப் படப்பிடிப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கின, விளம்பரத்திற்கானப் புதுமுக நடிகைகளுக்கானத் தேர்வில் இருந்தாள் நந்தனா. இதற்கிடையில் அவளுக்கும் யாழினிக்குமான உறவு பலப்பட்டது. வாரத்தில் இரண்டு நாட்கள் கிளாஸ்ஸிற்கு வந்துகொண்டிருந்த யாழினி நந்தனாவை பார்ப்பதற்காகவே மூன்று நாட்கள் வரத்தொடங்கினாள், அவள் மட்டும் இன்றி அரவிந்தும் அவளுடன் மூன்று நாளும் வந்தான். அந்த வாரம் முழுக்க நடப்பதை நந்தனாவிடம் ஒப்பித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவாள். நந்தனாவும் யாழினியை மிகவும் எதிர்பார்க்கத் தொடங்கினாள். இரண்டு வார அலசலுக்குப் பின் நந்தனா  மூன்று புதுமுகங்களைத் தேர்ந்தெடுத்து இருந்தாள், அதில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யச்சொல்லி அர்ஜுனிடம் கொடுத்தாள். முதல் இரண்டு பெண்களைப் பற்றிக் கூறி அவர்களின் குறும்படக் காணொளியை அவனுக்குக் காட்டினாள். மூன்றாவது பெண்ணின்  படத்தைப் பார்த்த அர்ஜுன் தீ சுட்டதுபோல் எழுந்து நின்றான். அவனை விசித்திரமாகப் பார்த்தாள் நந்தனா. இந்த பெண் வேண்டாம் அந்த இரண்டு பெண்களில் ஒருவரை முடிவு செய் என்றான். அவள் காரணம்