கதிர் நந்தனாவிடம் ஆமா, இப்ப எதுக்கு கப்பல் கவுந்தமாதிரி மூஞ்சவெச்சுருக்க மச்சான் என்றான். ஓ கப்பல் கவுந்தா மூஞ்ச இப்படித்தான் வெச்சு இருப்பாங்கன்னு உனக்கு யாரு சொன்னது, என்று அவனிடம் பாய்ந்தாள், அவனோ அலட்டிக்கொள்ளாமல் நீ நல்லாத்தான் இருக்கியா? எதோ கவலைல இருக்கனு நினைச்சு ஆறுதல் சொல்லான்னு பாத்தேன் ஓகே ஓகே நீ உன் ஆராய்ச்சிய நடத்து என்றான். என்னடா கிண்டலா? பின்ன என்ன அந்த அய்யனார் கிட்ட பேசிட்டு வந்ததுலயிருந்து எதோ ஞானி லெவெல்க்கு பீலிங்ஸ் விட்டுட்டு இருக்க என்றான். அர்ஜுன் சொன்னதை கதிரிடம் சொல்ல தோணாமல் அந்த பேச்சை மாற்றினாள், கதிரிடம் இருந்து நந்தனா மறைக்கும் முதல் விஷயம் இது. அதனை அவள் உணரவேயில்லை. திடீரென எதோ தோன்ற நந்தனா கதிரிடம் ஏன் தோஸ்த் நீ அர்ஜுன் இடத்துல இருந்து உன்கிட்ட ஒரு பொண்ணு சவால் விட்டு அவளே அத மறந்ததுக்கப்புறம் நீயா கூப்பிட்டு நான் தோத்துட்ட அப்படினு