யாதுமற்ற பெருவெளி - 3

ஒரு வாரம் கழித்து கொடைக்கானலுக்கு காலேஜ் டூர் போகலாம் என காலேஜ் நிர்வாகம் அனுமதி கொடுத்தது. என்ன மச்சான் ஹேப்பி ஆ இப்பவாவது கொஞ்சம் சிரியேன் என்றான் கிரிஷ். சாம் வருவாளான்னு தெரியல அப்படி இருக்கப்ப எப்படிடா சந்தோஷமா இருக்குறது என்றான் தீபன் , அதெல்லாம் நிச்சயம் வருவாடா . இப்பவே ஃபோன் பண்ணு வேணாம்டா அந்த பிரவீன் கூட இருந்தா பிரச்சனை ஆயிடும் ம் நீ அவனுக்கு பயப்படுறியா ? என்ன இருந்தாலும் நாளைக்கு சம்யுக்தா ஹஸ்பண்ட் ஆக போறவன் இல்ல.. அதெல்லாம் நடக்கும் போது பாத்துக்கலாம் cheerup மச்சி.. ஈவினிங் சாமை மீட் பண்ணும் போது கேட்கிறேன் என்றான் தீபன் . ஓகே ஓகே சம்யுக்தாவே இவனுக்கு 6 மணி போல ஃபோன் பண்ணினாள் . அப்பா கிட்ட கேட்டேன் காலேஜ் டூர் போக பர்மிஷன் கொடுத்து விட்டார். நீ வருவேன்னு தான் நான் பர்மிஷன் கேட்டேன் என்றாள்.