என் காதாலடி நீ

ஆகாயத்தில் வெண்ணிற மேகங்களில் வெண்ணிறமும் இருளும் சூழ்ந்து அதற்கு நடுவில் கிழித்துக்கொண்டு வந்து இருந்து அந்த விமானம். அதில் பல கனவுகளுடன் பயணித்துக் கொண்டிருந்தான்  வித்தார்த். இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்று தாயகம் திரும்பிக் கொண்டிருந்தான்.பால்வண்ண அப்பழுக்கற்ற நிறம், ஆறடி உயரம், ஆண்களுக்கே உரித்தான கம்பீரம் என அனைத்தும் நிறைந்தவன் தான் வித்தார்த்.திருமணம் ஆகி ஒரே மாதத்தில் புதுமனைவியை விட்டு செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான்.அதுவும் சிறு வயது மாமன் மகள் தான் அவன் மனைவி. இரண்டு வருடம் வீடியோ கால், வாய்ஸ் கால் செய்து பல ஏக்கங்களோடும், ஆசைகளோடும் செலவிட்டான். மனைவியின் அழகிய முகம் அவன் கண்முன்னே வந்து சென்று கொண்டிருந்தது. அப்பாவின் கடன் சுமையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் தான் அமெரிக்கா செல்ல நேரிட்டது. எல்லா கடனையும் அடைத்து விட்டு முழு திருப்தியோடு மனைவி நினைவுகளோடு வந்து கொண்டிருந்தான்.சென்னை ஏர்போர்ட்டை அந்ததும் அவனது இரண்டு அக்காக்கள் மாமன்கள், அவர்கள்