மலரியின் அக்கா, ஸ்வேதா வருவதைப் பார்த்து, “நீயே வந்துட்ட, எங்க அந்த மகாராணி இன்னும் வீட்டுக்குக் வரல?” என்று கேட்டாள்.“அப்படியா? அவ எனக்கு முன்னாடி வந்திருக்கணுமே. இன்னும் வரலனா எங்க ஊர் சுத்திட்டு இருக்கிறாளோ எனக்கு எப்படி தெரியும்? அவ இப்படித்தானு சொன்னா நீங்கதான் யாருமே நம்பல. இப்ப பாருங்க, நான் கூட வீட்டுக்கு வந்துட்டேன், இந்த மகாராணி இன்னும் வீட்டுக்கு வரல. எங்க எவன் கூட சுத்திக்கிட்டு இருக்கிறாளோ!” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.அதை அங்கே ஹாலில் உட்கார்ந்துகொண்டிருந்த அனைவரும் கேட்டனர். மலரின் அம்மாதான், “இந்த அடங்காப்பிடாரியை வீட்ல வச்சுக்கிட்டு இம்சையா இருக்கு. எங்கேயாவது போய் தொலைன்னாலும் போய் தொலைய மாட்டேங்குது. ஒரு பொட்டப் பிள்ளை நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்லை. இன்னும் கூட எங்க இருக்கான்னு தெரியல. நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா? பாருங்க, ஸ்வேதா கூட வந்துட்டா. நம்மள பார்த்து ஊரே சிரிக்கிற மாதிரிதான்