“நீ கோபப்படுற அளவுக்கு இந்த ஃபைலில் அப்படி என்ன இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே துருவன் அதனை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தான். அவன் படிக்கப் படிக்கத்தான் அக்னியின் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அதை படித்து துருவனுக்கே கோபம் வந்தது. “இப்படியும் ஒரு குடும்பமா?” என்று நினைத்தான்.“இந்தப் பொண்ணோட முகத்தைப் பார்த்தால் குழந்தைத்தனமாக இருக்கிற மாதிரி இருக்கு. இந்தப் பெண்ணைப் போய் இப்படி கொடுமைப்படுத்த எப்படி அங்கு இருப்பவர்களுக்கு மனசு வந்துச்சு? பெத்த அம்மா, அப்பா இந்தக் கொடுமையைப் பார்த்து சும்மா இருந்தது மட்டும் இல்லாமல், அவர்களும் அதே கொடுமையைச் செய்திருக்கிறாங்க. எப்படித்தான் இவர்களுக்கு மனம் வந்தது பெற்ற பிள்ளையை இவ்வளவு கொடுமைப்படுத்துவதற்கு?” என்று நினைத்த துருவன்.“டேய் அக்னி, என்னடா இது! இந்தக் குடும்பம் இவ்வளவு கேவலமாக நடந்திருக்கு அந்தப் பொண்ணு கிட்ட. பாவம் அந்தப் பொண்ணு. அதனாலதான் நம்ம கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியாம, 'இதுக்கு மேல கேட்காதீங்க'னு சொல்லிட்டு தலையைக் குனிந்து இருந்திருக்கு