அக்னியை ஆளும் மலரவள் - 10

  • 105
  • 63

  காரின் பின் சீட்டில் கண்களை மூடி அமர்ந்திருந்த அக்னியின் மீது ஏதோ விழுவதுபோல் இருக்க, கண்களைத் திறந்து பார்த்தான். பார்த்தவுடன் அவனது கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி. ஏனென்றால் அவன் பக்கத்தில் மயங்கிக் கிடந்தது, காலையில் யாரைப் பார்க்க வேண்டும் என்று பேருந்தைப் பின்தொடர்ந்து சென்றானோ அவள் தான். மயங்கி அவன் தோள் மீது சாய்ந்து கிடந்தாள்.ஆம், அவன் பக்கத்தில் மயங்கிக் கிடந்தது மலர்தான். “இவள் எப்படி இங்கே?” என்று அதிர்ச்சியுடன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். காலையில் அவன் பார்க்கும்போது சிரித்துக்கொண்டு, விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தைத்தனமான முகத்தில் இப்போது அழுத முகம், கன்னங்களில் கைத்தடம், உதட்டோரம் இரத்தம், தலை எல்லாம் கலைந்து ஒருமாதிரி பார்க்கவே பரிதாபமாகக் கிடந்தாள். காலையில் அன்று மலர்ந்து மலர்போல் இருந்தவள் இப்போது வாடிய மலராகக் கிடந்தாள்.அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்த அக்னியை, துருவன்தான் நினைவுபடுத்தினான்.“அக்னி, ஹாஸ்பிடல் வந்துருச்சு. நீ காரிலேயே இரு. நான் அந்தப் பெண்ணை ஹாஸ்டல்ல சேத்துட்டு வந்துடுறேன்” என்று