அக்னியும் துருவனும் வந்த விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியதும், அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறி, தங்களுக்கென இருக்கும் பங்களாவிற்குச் சென்றனர். அவர்கள் வருவதைப் பற்றி முன்னரே தெரிவித்திருந்ததால், அங்குள்ள வேலையாட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி, அவர்கள் வருகைக்காக ஒரு வேலையாள் வாசலிலே காத்துக்கொண்டிருந்தார்.அவர்களின் கார் பங்களாவின் வாயிலுக்கு அருகில் வந்து நின்றது. வாயிலருகே நின்றிருந்த காவலாளி, கார் வந்து நின்றவுடன் கதவைத் திறந்துவிட்டார். கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு, அங்கு அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த வேலையாள் வெளியே வந்து பார்த்தார்.அக்னி வந்த கார் நேராக வீட்டின் வாசலில் வந்து நின்றது. அங்கிருந்த வேலையாள் உடனடியாக காரின் பின் கதவைத் திறந்துவிட, அதிலிருந்து இறங்கிய அக்னி வேகமாக வீட்டினுள் சென்றுவிட்டான். உள்ளே நுழைந்ததும், மாடியில் இருக்கும் அவனது அறைக்கு இரண்டு இரண்டாக படிகளை வேகமாக ஏறி, தன்னுடைய அறையில் அடைந்துகொண்டான்.இங்கு வெளியே அவன் இறங்கி உள்ளே சென்றதும், துருவனும் பின்னாலேயே வேலையாளின் உதவியுடன் தங்களுடைய லக்கேஜ்களை