மலர் தோட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து பயந்து வேகமாக உள்ளே நுழைந்தவள், அங்கு அவளுக்காகவே காத்திருந்த அவளின் பெரியம்மாவிடம் மாட்டிக்கொண்டாள்.“ஏய் நில்லுடி! காலையில அவ்வளவு சீக்கிரம் எதுக்கு காலேஜுக்கு போன? அவ்வளவு சீக்கிரத்தில் உனக்கு என்ன வெட்டி முறிக்கிற வேலையா? உன் கூடதான ஸ்வேதாவும் படிக்கிறா, அவ எல்லாம் அவ்வளவு சீக்கிரம் போகல. நீ மட்டும் எதுக்கு அவ்வளவு சீக்கிரம் போன? யாரைப் பார்க்க போன? உண்மைய சொல்லு!” என்று சத்தமாக கத்தினார்.அவர் சத்தத்தைக் கேட்டு உள்ளே இருந்த பெண்கள் அனைவரும் ஹாலுக்கு வந்தனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால் பெண்கள் அனைவரும் ஹாலில் நின்றனர்.வெளியே தோட்டத்தில் இருந்த (ஜெய் கைலாஷ்) அவர்களும் இவரின் சத்தத்தைக் கேட்டு உள்ளே வந்தனர்.அனைவரும் அவளையே பார்க்க, என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள் மலர். “ஏன் அத்தை அந்தப் பெண்ணை திட்டுறீங்க?” என்று கேட்டான் கைலாஷ்.“காலையில எல்லா வேலையும் முடிக்காமலேயே காலேஜுக்குப் போறேன்னு சீக்கிரமா இங்கிருந்து ஓடிப் போயிட்டா.