அக்னியை ஆளும் மலரவள் - 7

  • 48

“ஏய் அச்சு, இவ என்னத்தடி இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கா?”“அது ஒண்ணும் இல்லடி. இந்த ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்து, அதுக்குக் காசு வாங்கினா, ‘இந்தக் காசு இவளுக்கு எப்படி வந்துச்சு?’ன்னு வீட்ல இருக்குறவங்க கேட்பாங்களாம். அதுக்குத்தான் அவங்க வீட்டுல இருக்குறவங்களை என்ன சொல்லி சமாளிக்கலாம்னு மேடம் யோசிக்கிறாங்க.”“நான் அந்தப் ப்ராஜெக்ட்டைச் செஞ்சு கொடிடுன்னு சொன்னா, இல்லை வேண்டான்னு சொல்றா. நீயே சொல்லுடி. அவ இந்தப் ப்ராஜெக்ட்டைச் செஞ்சு கொடுத்தா, அதுல வர காசை வச்சு அவளுக்குத் தேவையானத அவ வாங்கிக்கலாம் இல்ல? அதைச் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்குறா.”“மலரு, அச்சு சொல்றதுதான் சரி. நீ அந்தப் ப்ராஜெக்ட்டைச் செஞ்சு கொடுத்தேன்னா, அவங்க கொடுக்குற காசை வாங்கி உனக்குத் தகுந்ததை நீ வாங்கிக்கலாம். இந்தப் ப்ராஜெக்ட்டை நீ பயப்படாமல் செய். உனக்குத் துணையா நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்.”“சரி, நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க. அதனால நான் அந்தப் ப்ராஜெக்ட் செய்றேன். நீங்களும் எனக்கு ஹெல்ப்