“நான் கோபமா இருக்கேன்,” என்று துருவன் அக்னி அறையில் இருந்து செல்ல, போகும் அவனைத்தான் அக்னியும் பார்த்துக்கொண்டிருந்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அன்பு என்றால் அது நட்பு மட்டும் தான்.அக்னியிடம் பேசிவிட்டு வந்த துருவன் ஆதிக்கு போன் செய்ய, அந்த பக்கம் இருந்து போனை எடுத்த ஆதி “என்னடா, அண்ணன் கிட்ட பேசிட்டியா? உன்கிட்ட என்ன சொன்னார்?”“நீ வேற ஏண்டா, நான் அதைக் கேட்டதுமே அவன் ஒரு மொற பொரைச்சான் பாரு நானே கொஞ்ச நேரம் ஷார்க் ஆயிட்டேன். ஆனாலும் நீ சொன்னதை என்னால நம்பவே முடியலடா ஆதி. அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணுமுன்னு ரொம்பக் கவலைப்பட்டேன். நல்ல வேளை, இப்பவாவது அவனுக்குப் புத்தி வந்துச்சே.”“டேய், நானே அப்படித்தான்டா நினைச்சுட்டு இருந்தேன். அண்ணன் அவங்க பாட்டி சொன்னதைக் கேட்டு எங்க கல்யாணமே வேண்டான்னு சொல்லிடுவாரோன்னு பயந்தேன். ஆனால் அதுக்கு ஆப்போசிட்டா முடிவெடுத்து அவங்க பாட்டிக்கு சவால் விட்டுட்டு வந்துட்டாரு”“ஆனா