அக்னியை ஆளும் மலரவள் - 5

  • 252
  • 102

வேலையாட்களின் உதவியால் சமையல் வேலையை முடித்துவிட்டு அவசரமாக காலேஜுக்குச் செல்ல ரெடியாகி வெளியே வந்தாள். அவசரமாக வந்ததால் முன்னால் இருந்தவன் மேல் மோதிவிட்டாள். “யார் மீதோ மோதிவிட்டோம்?” என்று நினைத்து பயந்துகொண்டே விலகி நின்று நிமிர்ந்து முகத்தைப் பார்க்க, அங்கு புதிதாக ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த பிறகுதான் நிம்மதியாக மூச்சு விட்டாள் மலர். ஏனென்றால் இந்நேரத்திற்கு அந்த வீட்டில் யாரின் மீது மோதியிருந்தாலும் ஓங்கி ஒரு அறை விட்டிருப்பார்கள். அவள் தன்னைச் சரியாக நிலைப்படுத்திக்கொண்டு முன்னால் இருந்தவனை இப்போதுதான் நன்றாக உற்றுப் பார்த்தாள். அவன் அவளை விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்தான். அவனின் துகிலுறிக்கும் பார்வையில் சிறிது பயந்து தான் விட்டாள் மலர். அவனின் பார்வையை முறைத்து கொண்டே, “யார் நீங்க?” என்று கேட்டாள்.அவன் அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “செல்வி அத்தை வீடு இதுதானே?” என்று கேட்டான்.அப்போதுதான் அவளின் பெரியம்மா நேற்று அவர்களின் அண்ணன் மகன் வருவதாகச்