காரில் இருந்து இறங்கிய அக்னி வீட்டின் வாயிற்கதவினைப் பார்த்ததும், தான் வீட்டை விட்டுச் சென்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவனின் மூளையை சூழ்ந்து கொள்ள தனது கண்களை ஒரு நிமிடம் இறுக மூடி முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு வீட்டின் வாயிலிற்கு நடந்தான்.இங்கே அன்னலட்சுமி பாட்டியின் அறைக்குச் சென்ற வேலாயுதம், அக்னி வீட்டிற்கு வந்ததைப் பற்றிக் கூற,உடனே அன்னலட்சுமி பாட்டி தனது அறையை விட்டு வெளியே வந்தவர், தன் வயதினையும் மறந்து வேக வேகமாக நேராக வாசலுக்கு அருகில் சென்றார். அங்கே தனது பேரனைப் பார்த்ததும் அப்படியே அதே இடத்தினில் நின்றுவிட்டார்.அக்னி அவரைப் பார்த்துக்கொண்டே தான் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே வந்தும் அவன் பார்வையை மாற்றவில்லை.இங்கு அவனின் பாட்டியோ தனது பேரனின் தோற்றத்தினைப் பார்த்து ஸ்தம்பித்து அதே இடத்தில் நின்றுவிட்டார். காரணம், தன் பேரனின் தோற்றம் தனது கணவரைப் போலவே இருந்தது.அவன் முகத்தில் இருக்கும் இறுக்கம், அவன் பார்வையில் இருக்கும் தீர்க்கம், நடையில்