காற்றோடு கலந்த விதையவள்.

  • 1.3k
  • 1
  • 441

எங்கும் கட்டிடங்களால் சூழ்ந்த அழகிய நகரமது. நெடுஞ்சாலை ஒட்டிப் பெரிய கண்ணாடி தடுப்புக்களிலான சூப்பர் மார்க்கெட். அதன் அருகே பிரசித்தி பெற்ற சிவனாலயம். எதிர் சாலையில் சிறிய பேருந்து தரிப்பிடம்.அதனுள் தான் நம் கதையின் நாயகி துஷாந்தினி ஏதோ பலத்த யோசனையுடன் சாலையை வெறித்தபடி நின்றிருந்தாள். எந்தத் தைரியத்தில் இவ்வளவு தூரம் தனியாக வந்தாள் என்பதே அவளது பெரும் கேள்வியாக இருந்தது.இங்கு யாரையும் அறியாள்! அதுவும் அவளுக்குப் புதிய இடம் வேறு யாரிடம் உதவி என்று கேட்பது? இங்கு எங்கே தங்குவது? அப்படித் தங்க இடம் கிடைத்தாலும், எவ்வளவு காலம் தான் கையில் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் போதுமானதாக இருக்கும்?ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் எனக்கு எதுவும் தேவையில்லை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்று இரவோடு இரவாக வந்து விட்டோம். இப்போது என்ன செய்வேன்? என்று எண்ணியவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல அவள் உலகம் மட்டும் இருளாக இருப்பது