அக்னியை ஆளும் மலரவள் - 1

  • 162

 அழகான காலை வேளையில் ஒரு பத்தொன்பது வயதுப் பருவ மங்கை, ஒரு இடத்தினை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும், பாசத்திற்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை என்று. அவளின் மனதிற்குள்ளும், “தன்னிடமும் யாராவது இதுபோல் உண்மையான பாசத்தைக் காட்ட மாட்டார்களா?” என்று அங்கே 14 சிறுமிகளுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும் உறவுகளை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.அப்போது “மலரு” என்ற குரல் வீட்டினுள் இருந்து கேட்க, அவளும் தன் நினைவுகளிலிருந்து வெளியே வந்து உள்ளே சென்றாள்.இவள் தான் நமது நாயகி மலர்விழி. பெயருக்கு ஏற்ப அவளின் மனமும் மலர்களைப் போல மென்மையானது. அழகான விழிகள், ஆப்பிள் கண்ணங்கள், செர்ரி உதடுகள், கருநீல இடைதாண்டிய கூந்தல் என எல்லோரும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரம்மன் செதுக்கிய சிலை. அன்பு, அடக்கம், அழகு என எல்லாம் அதிகம் கொடுத்த கடவுள், அவளின் வாழ்க்கையில் துன்பங்களையும் அளவுக்கு அதிகமாக அள்ளி கொடுத்துவிட்டார்.தென்னிந்திய மான்செஸ்டர் என அழைக்கப்படும் மரியாதை