வேண்டும் நீ எந்தன் நிழலாய்

  • 228
  • 60

அத்தியாயம் - 1அத்தியாயம் -1இந்தியாவில் தொழில் துவங்கப்போகும் ஜப்பானிய நடிகர் மற்றும் பாடகரான திரு.ஆராஷி ஷிமிஜு( Arashi Shimizu) மற்றும் அவரது சகோதரர் ரியோட்டோ ஷிமிஜு (Ryoto Shimizu)இந்தியா வருகை.. அவருடன் தொழில்முறையில் கை கோர்க்கும் Reni fashions அதன் founders and share holders உடன் நாளை மறுநாள் சந்திப்பு நிகழும் என தகவல்.. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தோ ஜப்பானிய தொழில் இணைவு பெரிதும் உதவும் என்று இந்தியாவின் பிரதம மந்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..மேலும் இந்த சந்திப்புக்கு வெளியுறவு துறை அமைச்சர் வருவார் என்றும் தகவல் பரவியுள்ளது..ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லைஎன்ற செய்தி தான் முக்கிய செய்தியாக அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்ப பட்டது..ஆராஷி ஷிமிஜு(Arashi shimizu) உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய சினிமா நடிகர் மற்றும் பாடகர்.. அவரது பாடல்கள் உலக புகழ்பெற்றவை.. அவர் நடித்த ஆரம்பகால திரைப்படங்களை தவிர இப்போது நடிக்கும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர்