“என்னமா தேனு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.அனைவர் முன்பு பதில் கூற சிறிது பயந்த பெண்ணவள் தன் தாயின் கையினை இறுக பற்றி கொண்டாள்.அந்த தாயின் உள்ளத்திற்கு தெரியாதா தன் மகளை பற்றி அதனால் அவளின் முகத்தினை அவர் பார்க்க, அவருக்கு மட்டும் தெரியுமாறு தலையை ஆட்டி திருமணத்திற்கு சம்மதம் கூறினாள் தேனு என்று எல்லோராலும் அழைக்கப்படும் தேன்மதி.பெண்ணவளுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்று அவளின் தாய் அனைவரிடமும் கூறிய உடன் இதுவரை அங்கு இருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலையை தாழ்த்தி அமர்ந்து இருந்த நமது நாயகன் முதல் முறை நிமிர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கூறிய பெண்ணவளை பார்த்தவன் முகத்தில் அப்புடி ஒரு அதிர்வு. அவன் பார்க்க வந்திருக்கும் பெண்ணவளை இப்பொழுது தான் முதல் முறை நேரில் பார்க்கிறான். அவன் அதற்காக கூட அதிரவில்லை பெண் இருக்கும்