உறவின் ஆசாரம்

  • 1.1k
  • 63

வெளியே ஆசாரத்தின்(பெருமழை) கோர தாண்டவத்தின் அரவம் வீட்டினுள்ளும்  கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட அதிகமாய் அவனது இதயத்தினுள் புயலும் திவலையும் வீசியடித்துக் கொண்டிருந்தது.ஏன் இந்த படபடப்பு அவனுக்கே  தெரியவில்லை? அவன் தவறேதும் செய்ய வில்லை தான். இருந்தும் தவறு செய்தது போலொரு படபடப்பு. 'அவளை இறக்கி விட்டு அப்படி சென்றிருக்கலாம். அவள் பேச்சை கேட்டு வீட்டுக்குள் வந்ததற்கு தான் என் மனதில் சொல்ல முடியாத கலவரத்திற்கு காரணம்.வீட்டில் ஏகபோக அமைதி அவனை மேலும் திகிலடையச் செய்தது. கையில் துண்டை கொடுத்து  துவட்டச் சொல்லிவிட்டு அவள் உடை மாற்றச்  சென்று விட்டாள். அவனும் தன் பின்னந்தலையை துவட்டிக் கொண்டு நடுக்கூடத்தை அலங்கரித்திருந்த அவர்களது குடும்ப புகைப்படங்களையும்  சில பொம்மைகளையும் பார்த்துக் கொண்டு வந்தவனுக்கு அந்தப் புகைப்படம்  தென்பட்டது.அவள் கணவனின் சிறு வயது புகைப்படமும் அவளது சிறு வயது புகைப்படமும் கீழே அவர்களது மகளின் புகைப்படமும் சேர்ந்து ஒரே பிரேமில் இருக்க, அழகா இருந்தது எடுத்து